Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குண்டு வெடித்தது போல இருக்கு…. சேதமடைந்த வீடுகள்…. போலீஸ் நடவடிக்கை….!!

அனுமதியின்றி காரில் வெடிப்பொருட்கள் கொண்டுவந்த உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இடைச்சிவிளை ஆனந்தவிளை பகுதியில் தானியல் மகன் பாலகிருஷ்ணன் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாவட்டம் அணைக்கரையில் வெடி குடோன்  அமைத்து திருமணம் மற்றும் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு வெடிகளை கொடுத்து வருகிறார். இவர் தனது காரி சீட்டுக்கு அடியில் 30 ஆயிரம் மதிப்பிலான வெடிகளை வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்ததும் ரிமோட் மூலம் கார் கதவை அடைத்தார். அப்போது திடீரென காரிலிருந்த வெடி அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் பாலகிருஷ்ணனுக்கு சிறு காயம் ஏற்பட்டது.

மேலும் அருகில் உள்ள 30-மேற்பட்ட வீடுகளில் விரிசல் உண்டாகி சேதமடைந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி கண்ணன், காவல் ஆய்வாளர் பாஸ்கர், உதவி ஆய்வாளர் முரளிதரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து காரில் அனுமதியின்றி வெடிபொருட்கள் கொண்டுவந்த பாலகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் குண்டு வெடித்தது போல் இருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |