வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் உள்ள ஹரிபுரத்தைச் சேர்ந்தவர் பட்டிலிங்கம் . இவருடைய மகன் ராஜசேகர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராஜசேகர் கூலி தொழில் செய்து வரும் நிலையில் தனது தாய் சரஸ்வதியுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று ராஜசேகரும் சரவதியும் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென்று இவரது வீட்டின் மண் சுவர் மேற்கூரையுடன் இடிந்து விழுந்தது.
இதில் ராஜசேகரும் அவரது தாய் சரஸ்வதியும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். இச்சம்பவம் குறித்துஅக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் தீயணைப்புநிலைய வீரர்கள் வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜசேகர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது தாய் சரஸ்வதி தலையில் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.