கனமழை பெய்ததால் தொழிலாளியின் வீடு இடிந்து விழுந்துவிட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. சிங்கம்பாறை பகுதியில் இருக்கும் பத்திநாதர் தெருவில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார்.
அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ராஜின் வீடு இடிந்து விழுந்துவிட்டது. அந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சேதமான வீட்டை பார்வையிட்டுள்ளனர்.