Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் சிதறி கிடந்த துணிகள்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. வாலிபர் கைது….!!

வீடு புகுந்து நகை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மு.வேலாயுதம்பாளையம் கிராமத்தில் நல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாசிலாமணி என்ற மனைவி உள்ளார். இவர்கள் சின்னமுத்தூர் பேருந்து நிலையம் பிரிவில் பால் விற்பனை கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நல்லசாமி பால் கடையிலிருந்து புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது கண்டு நல்லசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் அங்கிருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு போயிருந்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து நல்லசாமி வெள்ளகோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நகையை திருடி சென்றது அப்பகுதியில் வசிக்கும் நவீன்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நவீன்குமாரை கைது செய்ததோடு அவரிடமிருந்த நகையையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |