Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீடு புகுந்து திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் காஜா முகைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது மீரா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் தாழையூத்திலுள்ள தங்களது மகள் சுனைதாவை பார்க்க சென்றிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் காஜா முகைதீன் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 கிராம் தங்க மோதிரம், வெள்ளி பொருட்கள் மற்றும் வெளிநாட்டு பணத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து காஜா முகைதீன் முத்தையாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திரு.எம்.தங்கம்மாள்புரம் பகுதியில் வசிக்கும் சந்திரசேகர், கார்த்திகேயன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |