Categories
அரசியல் மாநில செய்திகள்

வீரமணி…. முத்தரசன்….. கே.எஸ் அழகிரி…. நாராயணசாமி….. கமல் இரங்கல் ….!!

மறைந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளரும் , திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் க.அன்பழகன் இன்று அதிகாலை 1 மணிக்கு காலமானார். வயது மூப்பு காரணமாக அன்பழகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை 1 மணிக்கு சிகிச்சை பலனின்றி அன்பழகன் உயிர் பிரிந்தது.அவருக்கு வயது 98.

பேராசிரியர் க அன்பழகன் மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் நாராயணசாமி , திராவிட கழகத் தலைவர் கி வீரமணி , தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி , இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி ராமகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

திராவிட சிகரம் சரிந்துவிட்டது- ஸ்டாலின்

திராவிட சிகரம் சாய்ந்துவிட்டது. சங்கப்பலகை சரிந்து விட்டது என்று இரங்கல் கவிதை வெளியிட்டு ஸ்டாலின் உருக்கத்தை தெரிவித்துள்ளார்.  எங்களின் ஆசான் உயிரிழந்துவிட்டார். என்ன சொல்லித் தேற்றுவது ,  கோடிக்கணக்கான கழக குடும்பத்தினரை? பேரறிஞர் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவர் , முத்தமிழ் கலைஞரை தாங்கும் நிலமாய் இருந்தவர், எனது சிறகை நான் விரிக்க வானமாய் இருந்தவர். என்ன சொல்லி நான் என்னை நானே தேற்றிக் கொள்வது என்று மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தலைவர் கலைஞர் அவர்களோ என்னை வளர்த்தார் , பேராசிரியப் பெருந்தகையே  என்னை வார்ப்பித்தார். எனக்கு உயிரும் உணர்வும் தந்தவர் கலைஞர் , எனக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டியவர் பேராசிரியர் என்று கவிதையின் மூலம் இரங்கலை தெரிவித்துள்ளார்.

கீ.வீரமணி நேரில் அஞ்சலி :

திராவிட கழகத் தலைவர் வீரமணி நேரில் அஞ்சலி செலுத்தினார். பெரியாரை பற்றி பேசா நாள்  , பிறவா நாளே என்ற அடிப்படையில் வாழ்ந்து வரலாறாய் மாறியுள்ளார் இனமான பேராசிரியர். பெரியார் கொள்கையில் ஊறித் திளைத்து அண்ணாவின் அன்புக்கு கலைஞருக்கு அரணாக இருந்தவர் பேராசிரியர் என்று வீரமணி புகழாரம் சூட்டியுள்ளார்.

முத்தரசன் : 

கடமை , கண்ணியம் , கட்டுப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் பேராசிரியர் அன்பழகன் 85 ஆண்டு கால பொதுவாழ்க்கை பேராசிரியை போன்று இந்தியாவில் வேறு எந்த எந்த தலைவருக்கும் கிடைக்காது.

புதுச்சேரி முதல்வர் இரங்கல்:

திமுகவை வலுவாக்க பாடுபட்டவர் பேராசிரியர் அன்பழகன் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தில் மரியாதைக்குரிய தலைவராக விளங்கிய அன்பழகன் மறைவு பேரிழப்பு என்று வேதனை தெரிவித்துள்ளார்.

கே எஸ் அழகிரி இரங்கல் :

கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவர் அன்பழகன் அன்பழகனின் மறைவு திமுகவுக்கு ஸ்டாலினுக்கும் பேரிழப்பு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி பெரியார் பேராசிரியர் க அன்பழகன் மறைவு மிகுந்த வேதனை தரக்கூடியதாக உள்ளது தமிழக அரசியலில் மிக மூத்த அரசியல் தலைவராக விளங்கிய அன்பழகன் மறைவு பேரிழப்பு என்று தெரிவித்துள்ளார்

கமல்ஹாசன் இரங்கல் :

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் முதுபெரும் தலைவர் திராவிட சிந்தனையில் தெளிவுரை பேராசிரியர் அன்பழகன். ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்த அன்பழகன் மறைவு வேதனை அளிக்கிறது. அன்பழகன் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்துக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கமலஹாசன் ட்விட்டரில் பதிவு செய்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |