செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யும் நபர்கள் மீது புகார் அளித்தும் காவல்துறை கண்டுகொள்ளாததால் மது விற்பனை செய்யும் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
மதுராந்தகத்தில் தர்மராஜா கோவில் விநாயகர் தெருவில் சரவணன் ஆனந்தி தம்பதியினர் அப்பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் மது வாங்க வரும் ஆண்கள் பலர் வீடு தெரியாமல் அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டின் கதவை தட்டியும் மது கேட்பதாகவும் இதனால் சங்கடமாக இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய கோரி மதுராந்தகம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் போலீசார் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து இன்று மது விற்பனை செய்பவர் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.