Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருட்டு போன நகை…. உரிமையாளரின் பரபரப்பு புகார்…. கைது செய்த போலீஸ்….!!

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் அவரது வீட்டின் அருகே உள்ள மற்றொரு சொந்தமான வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு ராஜேந்திரன் என்ற மகன் உள்ளார். இவர் தந்து வீட்டின் அருகில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த வழியாக ராஜாளிப்பட்டி காலனியில் வசிக்கும் கவியரசன் என்பவர் வந்துள்ளார். அவரை ராஜேந்திரன் விசாரித்தார். அதற்கு கவியரசன் மணப்பாறையில் உள்ள குமாரபட்டிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன்பின் ராஜேந்திரன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்க நகை, ஒரு ஜோடி கொலுசு மற்றும் செல்போன் ஆகியவை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து ராஜேந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கவியரசனை துரத்திப் பிடித்து விராலிமலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கவியரசனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதில் கவியரசன் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். அதன்பின் கவியரசன் இதற்கு துணையாக இருந்த அவரது நண்பர்களான ராஜாளிப்பட்டி காலனியில் வசிக்கும் 16 வயது சிறுவர்கள் 2 பேர் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |