Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டுமா…? நினைத்த காரியங்கள் நடக்க வேண்டுமா…? தினமும் இதை பண்ணுங்க போதும்…!!

வீட்டில் செல்வ வளம் பெருக கீழ்க்கண்ட மந்திரத்தை தினசரி 3 முறை கூற வேண்டும்.

இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையில் நடத்தப்படும் போராட்டம் தான் வாழ்க்கை. ஒருவரது வாழ்க்கையில் இன்பம் மட்டுமே இருந்தால் சுவாரஸ்யமே இருக்காது. அதுவே ஒருவரது வாழ்க்கையில் துன்பம் மட்டுமே இருந்து வந்தால் அவருக்கு அந்த வாழ்க்கையே வெறுத்து விடும். இரண்டும் சரியான அளவில் அமைந்தால் மட்டுமே ஒருவரது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதற்காக இந்து மதத்தில் எண்ணற்ற அளவு மந்திரங்களும் பாடல்களும் இருக்கிறது.

இந்த மந்திரங்களை நாம் தினமும் கூறுவதன் மூலம் நல்ல உடல்நலத்தோடு குடும்பத்தினருடன் செழிப்பாக வாழ முடியும். தற்போதய காலகட்டத்தில் ஒருவர் சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் அவரது ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும், செல்வ வளங்கள் பெருக வேண்டும். அதற்காக இந்த லட்சுமி குபேர மந்திரத்தை தினமும் 3 முறை கூறலாம்.

  • ஓம் ஸ்ரீ மகா லட்சுமி ச வித்மஹே
  • விஷ்ணு பத்ந்யைச தீமஹி
  • தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

இதற்கான பொருள் என்னவென்றால், நான் விஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமியை நினைத்து வழிபடுகிறேன். அவரை போற்றுகிறேன். என் ஆசைகள் நிறைவேற எனக்கு அருள் கிடைக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.

குறிப்பாக இந்த மந்திரத்தை தினம்தோறும் நீங்கள் கூறினால் உங்கள் ஆசைகள் கூடிய சீக்கிரத்திலேயே நிறைவேறும்.

Categories

Tech |