படுக்கைக்கு கீழ் பாம்பு தனது குட்டிகளுடன் வசித்து வந்ததை கண்ட தம்பதியினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்கா நாட்டில் ஜார்ஜியாவைச் சேர்ந்த திரிஷ் என்ற பெண்ணும் மற்றும் அவரது கணவர் மேக்ஸும் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து திரிஷ் தனது வீட்டில் இருந்த படுக்கையை சுத்தம் செய்வதற்காக எடுத்துள்ளார். அதில் 17 பாம்பு குட்டிகளுடன் ஒரு பாம்பு வசித்தது தெரியவந்துள்ளது. இதனைக்கண்ட மேக்ஸ் மற்றும் திரிஷ் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து மேக்ஸ் பெரிய கொம்பு ஒன்றை உபயோகித்து அந்த பாம்புகளை பையில் பிடித்து போட்டுள்ளார்.
மேலும் பிடித்த பாம்புகளை அருகிலிருந்த ஓடையில் அவர் விட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து திரிஷ் கூறுகையில் “வீட்டில் எங்கு பார்த்தாலும் ஒரு விதமான பயம் ஏற்பட்டுள்ளதாகவும் பாம்புகளை ஒன்றாக பார்ப்பது என்பது அதிர்ச்சியான நிகழ்வு” எனவும் கூறியுள்ளார். அதன் பிறகு இவர்கள் பாம்பு பிடிப்பவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து வேறு பாம்புகள் இல்லை என உறுதி செய்துள்ளனர்.