Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீட்டின் மீது விழுந்த… 10 கிலோ எடை உள்ள பாறை… கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்..!!

கல் குவாரியில் வெடி வைத்து பாறை தகர்க்கப்பட்டதால் அதிலிருந்து  10 கிலோ எடையுள்ள கல் ஒருவரின் வீட்டில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் அவ்வபோது பாறைகளை வெடி வைத்த தகர்த்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று பயத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த குவாரியில் வேலை செய்யும் ஊழியர்கள் பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது 10 கிலோ எடையுள்ள பாறை ஒன்று வெடி வைத்ததில் இருந்து தூக்கி எறியப்பட்டு அப்பகுதியில் வசிக்கும் வேல்சாமி என்பவரது ஓட்டு வீட்டின் மீது விழுந்துள்ளது. இதில் அவரது  வீடு முழுவதும் நாசமாகி விட்டது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக  யாருக்கு எந்தவிதமான  உயிர் சேதமும் ஏற்படவில்லை. எனவே இதனால்  கோபமடைந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் பட்ட முத்து என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களுடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தாசில்தார்  குடியிருப்பு பகுதிக்கு அருகில் இருக்கும் குவாரியை தடை செய்ய உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்று உள்ளனர்.

Categories

Tech |