சிறய வகை விமானம் வீட்டின் மேல் விழுந்ததில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டில் கொலம்பியா மாவட்டம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சிறிய வகை விமானம் ஒன்று பறந்துள்ளது. இதனையடுத்து விமானமானது அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டின் மேல் விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து கடும் போராட்டத்திற்கு பிறகு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்து தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.