வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த தங்க நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் ராதா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு ஸ்வேதா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் ராதாவின் தந்தை உடல்நலக் குறைவால் இறந்ததால் வீட்டைப் பூட்டிவிட்டு தனது மகளுடன் அவர் ஊருக்கு சென்றுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வந்த ராதா வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து ராதா வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதை அறிந்தார். இதுகுறித்து ராதா அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.