வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளியங்காடு பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் வீரபாண்டியில் சொந்தமாக சலூன் வைத்துள்ளார். இந்நிலையில் பாபு தனது மனைவி, மகள், மகனுடன் சேர்ந்து கடந்த 16-ஆம் தேதி திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனையடுத்து பாபு திரும்பி வீட்டிற்கு வந்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து பாபு வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ஆகியவை காணாமல் போஇருந்தது.
இதுகுறித்து பாபு திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.