மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீட்டை திறந்து கத்தியால் முகத்தைத் தாக்கி நகையையும், பணத்தையும் கொள்ளை அடித்தனர்.
திருப்பூரையடுத்த உடுமலை அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி திரு ராஜகோபாலை கத்தியால் தாக்கி கட்டிப்போட்டு 40 சவரன் நகைகள், ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள், ராஜகோபால் படுத்திருந்த அறையில் உள்ளே சென்று கத்தியால் முகத்தில் தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர்.