Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் சிதறி கிடந்த பொருட்கள்…. வாலிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி…. மர்மநபருக்கு வலைவீச்சு….!!

வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் நகை மற்றும் 1 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொங்கலூர் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிவர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கிருஷ்ணகுமார், வசந்தகுமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 4 பேரும் காரில் உடுமலைக்கு சென்றுள்ளனர். அப்போது கிருஷ்ணகுமார் மட்டும் கோயம்புத்தூர் செல்வதாக கூறி பல்லடத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் கோவையில் இருந்து மீண்டும் வீடு திரும்பிய கிருஷ்ணகுமார் வீட்டின் முன்பக்க கதவு வழியாக சென்று மாடியில் படுத்து தூங்கியுள்ளார். இதனையடுத்து மறுநாள் கலையில் எழுந்து வந்த போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகுமார் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெற்றோர் வந்து பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த 16 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி குடம் மற்றும் கொலுசு ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராமச்சந்திரன் அவினாசிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |