Categories
உலக செய்திகள்

தம்பதியின் வீட்டிற்குள் புதைக்கப்பட்டிருந்த குழந்தை… என்ன நடந்திருக்கும்…? குழப்பத்தில் காவல்துறையினர்…!!

கனடாவில் வீட்டிற்குள் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை காவல்துறையினர் மீட்டுள்ளனர். 

கனடாவில்  ஹால்மில்ட்டன் என்ற நகரில் அமைந்துள்ள வீட்டில் சந்தேகப்படும்  வகையில் ஏதேதோ மர்மமான விஷயங்கள் நடந்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் அந்த வீட்டில் இருந்த குழந்தை உயிரிழந்ததாகவும் அந்நகரில் செய்தி ஒன்று பரவியது. பின்னர் அந்த செய்தி புரளிதான் என்று மற்றொரு செய்தியும் பரவிக்கொண்டிருந்தது.இந்நிலையில்  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்ததாக கூறப்பட்ட குழந்தையை தேடினர்.

அப்போது அந்த வீட்டின் தரையில் ஏதோ ஒன்று புதைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். அதனால் அவர்கள் தடவியல் நிபுணர்களின் உதவியுடன் அந்த இடத்தை தோண்டியபோது ஒரு குழந்தை அங்கு புதைக்கப்பட்டிருந்தது.  அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Nathan O’ Brien – winnie Ensor என்ற தம்பதி இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுக்கு தான் இந்த குழந்தை பிறந்திருக்கும்  என்று காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். அந்த வழக்கை முதலில் கொலை என்று குறிப்பிட்டு வந்த காவல்துறையினர் தற்போது குழந்தை உண்மையிலே கொலை தான் செய்யப்பட்டதா  என்ற கோணத்திலும்  விசாரித்து வருகின்றனர்.  இந்த சம்பவமானது அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |