பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவருக்கு தற்போது 58 வயது ஆகும் நிலையில், சமீபத்தில் சினிமாவில் இருந்து ஒரு வருட காலத்திற்கு தான் ஓய்வு பெற போவதாக அறிவித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லால் சிங் தத்தா திரைப்படம் படு தோல்வி அடைந்தது. கடந்த 1986-ம் ஆண்டு நடிகை ரீனா தத்தாவை அமீர்கான் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஜூனைத் என்ற மகனும் ஐரா என்ற மகளும் இருக்கிறார்கள். கடந்த 2002-ம் ஆண்டு அமீர்கான் மற்றும் ரீனா விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்த நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை அமீர்கான் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஆசாத் ராவ் என்கிற மகன் இருக்கும் நிலையில், கடந்த வருடம் கிரண் மற்றும் அமீர்கான் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில் நடிகர் அமீர்கானின் மகள் ஐரா பிட்னஸ் பயிற்சியாளரான நுபூர் சிகார் என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இந்த நிச்சயதார்த்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் விழாவின்போது அமீர்கான் மிகவும் மகிழ்ச்சியாக நடனமாடியுள்ளார். மேலும் இந்த திருமண நிகழ்ச்சி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
View this post on Instagram