வீட்டை சூறையாடிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள பாலரெங்காபுரம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அதே பகுதியில் உள்ள ஒரு நடன வகுப்பில் படித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும் அங்குள்ள சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் 7 பேர் கொண்ட கும்பல் சக்திவேலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
இது தொடர்பாக சக்திவேல் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வீட்டை சூறையாடியது தொடர்பாக ஹரிபிரசாத், பிரகாஷ், திருக்குமரன், மணிகண்டன், லட்சுமணன், மற்றொரு மணிகண்டன், கார்த்திக் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையின் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.