வீட்டை உடைத்து சூறையாடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீவலப்பேரி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஒரு சித்திரை ராஜா என்ற மகன் உள்ளார். இவர் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் தனது தந்தை வீட்டிற்கு சித்திரை ராஜா சென்றுள்ளார். இவர் அவரது தந்தை குமாரிடம் தனக்கு வீட்டில் பங்கு வேண்டும் என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.
மேலும் சித்திரை ராஜா வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து சூறையாடினார். அங்கிருந்த கதவு, பீரோ உள்பட பல்வேறு பொருட்களை உடைத்து வீசினார். இதனை யடுத்து சித்திரை ராஜா அவரது தந்தை குமாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து குமார் சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.