Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற தொழிலாளி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அம்மாபாளையம் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கோவிந்தசாமி தனது குடும்பத்தினருடன் தர்மபுரிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கோவிந்தசாமி மறுநாள் காலையில் மீண்டும் ஊருக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை, வெள்ளி பொருட்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோவிந்தசாமி திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கோவிந்தசாமி வீட்டில் திருடியதாக வேலம்பாளையம் பகுதியில் வசிக்கும் கவிராஜ், அகஸ்டின், உதயா ஐஸ்டின் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |