Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நகை, பணம் கொள்ளை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வக்கீலாக உள்ளார். இவரது வீட்டில் முத்துக்குமார் என்பவர் வாடகைக்கு இருந்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து முத்துக்குமார் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு முத்துகுமார் அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் முத்துகுமார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 5 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து முத்துக்குமார் தாழையூத்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் நெல்லை டவுன் பகுதியில் வசிக்கும் காளிராஜா, சங்கரநகர் பகுதியில் வசிக்கும் நாகராஜன் ஆகிய இருவரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 5 பவுன் தங்க நகையையும் மீட்டனர்.

Categories

Tech |