வீட்டில் நகை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆமின்புரம் பகுதியில் சல்மான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபேதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் இருந்த 1 பவுன் நகை திருட்டு போனது. இதுகுறித்து சுபேதா மேலப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் நகையை திருடிச் சென்றது மேலப்பாளையம் பகுதியில் வசிக்கும் ஷகிரா பீவி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஷகிரா பீவியை கைது செய்ததோடு அவரிடமிருந்து நகையையும் பறிமுதல் செய்தனர்.