Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருட்டு போன ரூ.12 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள்…. உரிமையாளர் அளித்த புகார்…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!

கூலித் தொழிலாளி வீட்டில் புகுந்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடுநாலுமூலைக்கிணறு பகுதியில் முப்பிடாதி முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். கடந்த 28-ஆம் தேதி ஜெயா தனது 37 1\4  பவுன் நகையை வீட்டில் உள்ள பீரோவில் வைத்து விட்டு சாவியை மற்றொரு அறையில் வைத்துள்ளார். மேலும் அந்த நகைகளுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தையும் வைத்துள்ளார். கடந்த 4-ஆம் தேதி மேலும் குறிப்பிட்ட பணத்தை வைப்பதற்காக ஜெயா பீரோவை திறந்துள்ளார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனால் ஒரு லட்சம் மட்டும் அதே இடத்தில் பத்திரமாக இருந்தது.

மேலும் திருட்டு போன நகையின் மொத்த மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும். இது குறித்து முப்பிடாதிமுத்து திருச்செந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர்கள் பீரோவை உடைக்காமல் சாவியை வைத்து திறந்து கொள்ளயடித்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் வீடு புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |