வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குரும்பூர் பகுதியில் சில பேர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குரும்பூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது குரும்பூர் பகுதியில் வசிக்கும் சின்னத்துரை என்பவரது வீட்டில் 427 மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவர் வீட்டில் 6 சாக்கு மூட்டைகளில் 5700 புகையிலை பொருட்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குரும்பூர் காவல்துறையினர் சின்னத்துரையை கைது செய்ததோடு அவர் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்கள், புகையிலை பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய செல்வகுமார் மற்றும் காளி ஆகியோரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.