வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கந்தசாமிபுரம் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வெளியில் சென்றுள்ளார். அதன் பின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் தங்க நகை மற்றும் 75 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ராமச்சந்திரன் புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பணத்தை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.