Categories
உலக செய்திகள்

வீட்டில் வளர்க்க அனுமதி…. சட்டபூர்வமாக அங்கீகரிப்பு…. நிறைவேற்றிய இத்தாலி நாடாளுமன்றம்….!!

வீட்டிலேயே கஞ்சா சாகுபடி செய்யவதை சட்டபூர்வமாக இத்தாலி நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது.

இத்தாலியில் வீட்டிலேயே கஞ்சா செடியை வளர்ப்பது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சீர்திருத்த சட்டமானது கடந்த புதன்கிழமை அன்று இத்தாலி நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நீதித்துறையின் சார்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி வீட்டில் நான்கு கஞ்சா செடிகள் வரை வளர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் கஞ்சா கடத்தல், விற்பனை செய்தல், விநியோகித்தல் போன்ற  குற்றங்களுக்கான அபராதங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுமார் 6 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

மேலும் இந்த சட்டத்தை இத்தாலிய பாராளுமன்ற உறுப்பினரான ரிக்கார்டோ மேகி முன்வைத்தார். அதிலும் தனிப்பட்ட ஒருவரின் பயன்பாட்டிற்காக உள்நாட்டிற்குள்ளேயே கஞ்சாவை சாகுபடி செய்ய அனுமதி வழங்கிய ஐரோப்பிய நாடு இத்தாலி என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஸ்பெயின் மற்றும் செக் குடியரசு நாடுகள் வீட்டில் ஐந்து கஞ்சா செடிகள் வளர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

இருப்பினும் 2019 ஆம் ஆண்டு இத்தாலி உச்சநீதிமன்றத்தில் வீட்டில்  குறுகிய அளவு கஞ்சா சாகுபடி செய்வதற்கு சட்டபூர்வமாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அது இந்த ஆண்டு தான் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. குறிப்பாக பிரித்தானியாவில் கஞ்சாவை வீட்டில் வளர்ப்பது, போதைப்பொருள் பதுக்கிவைத்தல், விற்பனை செய்வது போன்றவை சட்டத்திற்கு புறம்பானது ஆகும். இதற்காக அங்கு 2,500 பவுண்டுகள் அபராதமும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அளிக்கப்படும்.

Categories

Tech |