மக்கள் தங்கள் வீடுகளிலேயே கஞ்சா வளர்க்கலாம் என்று லக்சம்பர்க் அரசு அறிவித்துள்ளது.
பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படும் போதை மருந்துகளில் சில அடிப்படை மாற்றங்களை லக்சம்பர்க் நாடு கொண்டு வந்துள்ளது. இனிமேல் ஒரு குடும்பத்தில் 18 வயது மற்றும் அதற்கு மேலானவர்கள் இருந்தால் அதிகபட்சமாக நான்கு கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதி வழங்கியுள்ளது. இதனை நேற்று முன்தினம் லக்சம்பர்க் அரசு அறிவித்துள்ளது. மேலும் மக்கள் வீட்டின் உட்புறத்தில், வெளியில், மொட்டை மாடியில், பால்கனியில் என்று தங்களது எல்லைக்குள் மட்டும் வளர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பொது இடங்களில் கஞ்சா செடியை வளர்க்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனை அடுத்து 3 கிராம் கஞ்சாவை உண்பது குற்றமாக கருதப்படமாட்டாது. இருப்பினும் அதனை வைத்திருந்தால் சிறிய குற்றம் எனக் கருதப்பட்டு 25 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் கஞ்சாவை மூன்று கிராமுக்கு மேல் வைத்திருந்தால் நீங்கள் ஒரு வியாபாரியாக கருதப்படுவீர்கள் என்று அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் சாம் டான்சன் கூறியுள்ளார்.
இருப்பினும் விதைகளை இறக்குமதி செய்வதோ ஆன்லைனில் வாங்குவதை தவிர மக்கள் கடைகளிலும் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வளர்ந்த கஞ்சா செடிகளை விற்பனை செய்வது குறித்த தகவல்களும் இன்னும் வெளிவரவில்லை. இது தவிர்த்து ஒரு பெரிய அளவிலான உற்பத்தி மற்றும் மாநில விநியோக முறைகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த திட்டமானது பொழுதுபோக்கு மருந்துகளின் பயன்பாட்டின் அணுகுமுறையில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த காலங்களில் அரசு இந்த மருந்தை பயன்படுத்துவதை தடை செய்தது. ஆனால் அதனை கட்டுபடுத்த முடியவில்லை. அதனால் இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு முன்னோக்கு மாற்றத்தை தரும் என்று அரசு நம்புகிறது. குறிப்பாக மக்களும் இதனை சரியான முறையில் பயன்படுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.