வீட்டிலேயே பெண்ணிற்கு பிரசவம் பார்த்த அவசர கால மருத்துவ உதவியாளருக்கு உறவினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்லை கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ரேவதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த 108 ஆம்புலன்ஸ் சுப்பிரமணியனின் வீட்டிற்கு சென்றது. அதன்பிறகு அவசர கால மருத்துவ உதவியாளர் சுகன்யா வீட்டிலேயே ரேவதிக்கு பிரசவம் பார்த்துள்ளார்.
இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாய்,சேய் இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனை அடுத்து சுகன்யா மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சங்கர் ஆகியோரை சுப்பிரமணியனின் குடும்பத்தினர் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.