மூட்டு வலி எதனால் ஏற்படுகிறது, எளிய வீட்டு வைத்திய முறையில் எப்படி முற்றிலும் குணப்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம்.
இன்றைக்கு பலரும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள். சிலர் இளம் வயதிலேயே கூட மூட்டுவலிக்கு உள்ளாகிறார்கள். இதற்கு பல மருத்துவர்கள் மருந்து என பார்த்து மூட்டுவலி குறைந்தபாடில்லை. நம்மில் நிறைய பேர் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும் பொழுது சிறுநீர் கழிக்காமல் அடக்கிக் கொள்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான ஒன்று என்பதை நாம் அறிவதில்லை.
இப்படி நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால் சிறுநீர்ப்பை நிரம்பி அது உடலின் பிற பகுதிகளுக்கு சென்று விடுகிறது. அவ்வாறு செல்லும் பொழுது ரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் மூட்டுகளில் படிந்து விடுகிறது. இந்த சிறு சிறு கற்கள் சிநோவியல் மெம்பிரன் என்னும் இடத்தில் தங்கி விடுகிறது. இது பல வருடங்களாக தொடர்ந்து, சிலருக்கு 35 வயதுக்கு மேல் உள்ளவர்கள் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் மூட்டுகளில் அதிக வலி இருக்கும்.
இதுதான் ருமட்டாய்டு ஆர்த்தடீஸ் ஆரம்பநிலை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கு நம் முன்னோர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை. மேலும் ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி, முடக்கத்தான் கீரையிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து,
மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள். இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்து சென்று சிறுநீராக வெளியேற்றும் பொழுது அதில் சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நமது உடலிலேயே விட்டுவிடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது.
இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை, மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.
முடக்கத்தான் கீரையை பயன்படுத்துவம் முறை:
இரண்டு கைப்பிடி அளவு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய முடக்கத்தான் கீரையை எடுத்துக்கொள்ள வேண்டும். இலை எல்லாவற்றையுமே பயன்படுத்தலாம். இவற்றுடன் நான்கு பல் பூண்டு, இஞ்சி சிறிய துண்டு, சிறிய வெங்காயம் ஒன்று, மிளகு அரைத்தேக்கரண்டி, சீரகம் அரை தேக்கரண்டி, ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் விட்டு வதக்கி துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகி விடும்.
மேலும் முடக்கத்தான் கீரையை கொண்டு தோசை செய்தும் சாப்பிடலாம். இதனால் முதுகு தண்டுவடம் தேய்மானம் இருப்பவர்கள் மாதவிலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், கீல் பிடிப்பு ,கீல் வாதம், கால்களை நீட்டி மடக்க முடியாமல் இருப்பது, நடக்க முடியாமல் இருப்பது போன்றவை குணமாகும்.
அதேபோன்று முடக்கத்தான் கீரையை எண்ணெயில் மூட்டுவலிக்கு பூசினால் மூட்டு வலி விரைவில் குணமாகும். பொதுவாக இந்த நோய்கள் வருவதற்கு முன்பே சாப்பிட்டால் வராமல் தடுக்கலாம். 40 வயது தொடங்கியவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது. இதனை கண்டிப்பாக பயன்படுத்தி பாருங்கள் நிச்சயம் எந்த ஒரு பக்க விளைவுகளும் இன்றி மூட்டுவலி கண்டிப்பாக குணமாகும்.