Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான வெஜ்பிரியாணி செய்யலாம் வாங்க !!!

வெஜ் பிரியாணி

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 2 கப்

வெங்காயம்  –  3

தக்காளி –  3

கேரட் – 2

பீன்ஸ் – 50 கிராம்

பச்சை பட்டாணி – 1  கப்

உருளைக் கிழங்கு –  2

பச்சை மிளகாய் – 4

தயிர் – 2 டீஸ்பூன்

காஷ்மீர் மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்

பட்டை – 1

லவங்கம் – 4

ஏலக்காய் – 3

ஜாதிக்காய்த் தூள் – சிறிதளவு

இஞ்சி பூண்டு விழுது – 1  டீஸ்பூன்

புதினா, கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய்  –  தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

veg biryani images hd க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் பாசுமதி அரிசியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும் . பின் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், ஜாதிக்காய், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க  வேண்டும் . அதில் இஞ்சி – பூண்டு விழுது , பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்க  வேண்டும் . பிறகு கொத்தமல்லி, புதினா , காய்கறிகள் , மிளகாய்த் தூள், தயிர் , ஊறவைத்த அரிசி மற்றும் தேவையான உப்பு சேர்த்து மெதுவாக கிளற வேண்டும் . 4 கப் சுடுத்தண்ணீரை அரிசி கலவையில் ஊற்றிக் கிளறி குக்கரை மூடிவிட்டு சிம்மில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான  வெஜ் பிரியாணி தயார்!!!

Categories

Tech |