இஸ்ரேல் நிறுவனம், சைவ பிரியர்களுக்காக தாவர இறைச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலக நாடுகள் முழுக்க பலதரப்பட்ட மக்கள் இறைச்சி நுகர்வுக்கான சதவீதத்தை குறைப்பதற்காகவும் தாவர அடிப்படையில் இருக்கும் உணவு முறைக்கு மாறுவதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்கென்று இறைச்சி போன்ற வடிவம் மற்றும் மனமுடைய தாவரத்தால் உருவாக்கப்பட்ட இறைச்சியை இஸ்ரேல் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
பார்ப்பதற்கு மாட்டிறைச்சி போன்று இருக்கும் இந்த துண்டுகள், இறைச்சி கிடையாது. முழுவதும் தாவரப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் நிறுவனமானது, தாவர இடுபொருட்களின் நிறங்கள் மற்றும் இறைச்சிக்கான வாசனையை கொடுக்கும் வகையில் இயற்கை திரவங்களை கொண்டு தயார் செய்திருக்கிறது.
முதற்கட்ட தயாரிப்பு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து லண்டனில் முதல் தடவையாக தாவர இறைச்சி சோதனை செய்யப்பட்டது. பிரபல சமையல் கலைஞர்கள் இணைந்து தயாரித்த இதனை 20க்கும் அதிகமானோர் சாப்பிட்டிருக்கிறார்கள். இறைச்சி போல சுவை, மனம் இருப்பதாக அவர்கள் கூறினர்.
சோதனையில், சைவ உணவை விரும்பி சாப்பிடும் மக்களுக்கு, இந்த தாவர இறைச்சி அதிகமாக பிடித்திருக்கிறது. எனவே, உலக நாடுகள் முழுக்க தாவர இறைச்சியை விரைவாக கொண்டுவருவதற்கு இஸ்ரேல் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது.