Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிக்கி கொண்ட 3 பேர்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக செயல்களில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரளம் ரயில்வே கேட் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியில் வேகமாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ஆட்டோவில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஆட்டோவில் வந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் ஸ்ரீவாஞ்சியம் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம், பரணிதரன், கொல்லுமாங்குடியை சேர்த்த முகமது இப்ராஹிம் என்பது தெரியவந்தது. இவர்கள் நீடாமங்கலத்திலிருந்து கொல்லுமாங்குடிக்கு புகையிலைப் பொருட்களை  கடத்தி சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது.

அதன்பின் அவர்களிடம் இருந்த 612 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீராம், பரணிதரன், முகமது இப்ராஹிம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதனைதொடர்ந்து அவர்கள் கொடுத்த தகவலின்படி காவல்துறையினர் நீடாமங்கலத்தில் குடோனில் மறைத்து வைத்திருந்த 600 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததோடு அதே பகுதியை சேர்ந்த முனியப்பன் என்பவரையும் கைது செய்தனர்.

Categories

Tech |