மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம் ஆகும். அதன் அடிப்படையில் இந்த வருடத்தின் கடைசி மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது “பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதே சமயம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் மக்கள் அனைவரும் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் முக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதற்கிடையில் மத்திய அரசானது கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
உலக பொருளாதாரத்தில் 5-வது இடத்திற்கு இந்தியா முன்னேறி இருக்கிறது. நாட்டின் ஏற்றுமதி 400 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்து உள்ளது. அதேபோன்று விண்வெளி, பாதுகாப்பு, விளையாட்டு உள்ளிட்ட துறைகளிலும் சாதனை படைத்துள்ளது” என்று பிரதமர் கூறினார்.