Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அது இருக்கான்னு தெரியல…. வாகன ஓட்டிகளின் அச்சம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

வேகத்தடை மீது வர்ணம் பூச வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோதவாடியில் இருந்த பழுதடைந்த தார் சாலையை நெடுஞ்சாலைதுறையினர் சீரமைத்துள்ளனர். இந்த சாலை வழியாகத்தான் பொதுமக்கள் நெகமம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் வர்ணம் பூசாமல் இருக்கின்றது. இதனால் அங்கு வேகத்தடை இருப்பது தூரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை.

மேலும்  வேகத்தடையின் மீது வர்ணம் பூசாததால் இரவு நேரத்தில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினருக்கு கோதவாடி ஊராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வேகத்தடை இருப்பது தெரியும் வண்ணம் அதன் மீது வர்ணம் பூசி விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |