வெஜிடபிள் ஆம்லெட் சாண்ட்விச்,
தேவையான பொருட்கள் :
கடலை மாவு -2 கப்
நறுக்கிய- வெங்காயத்தாள்1 கப்
பொடியாக நறுக்கிய- தக்காளி1 கப்
மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
உப்பு தேவையான- அளவு
பொடியாக நறுக்கிய புதினா அல்லது கொத்தமல்லி-3 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய்-தேவையான அளவு
செய்முறை :
வெஜிடபிள் ஆம்லெட் சாண்ட்விச் செய்வதற்கு முதலில் கடலைமாவில் வெங்காயத்தாள், தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு, புதினா கலந்து போதுமான நீர் சேர்த்து தோசைமாவை விட சற்று நீர்க்க கலந்து கொள்ளவும்.
பிறகு தோசைக்கல்லை சூடு செய்து, சிறு சிறு குட்டி தோசைகளாக ஊற்றிப் பொன்னிறமாக சுட்டு எடுத்து வைக்கவும். பிறகு இரு புறமும் வெண்ணெய் தடவிய ப்ரெட் ஸ்லைஸ்களின் நடுவே இந்த ஆம்லெட்டை சூடாக வைத்து கையால் அழுத்தவும்.
சுவையான வெஜிடபிள் ஆம்லெட் சாண்ட்விச் ரெடி.