எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன சத்து உள்ளது என்பது பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க.
பாகற்காய்: நன்கு பசியைத் தூண்ட உதவும். மேலும் சர்க்கரை நோயாளியின் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இதில் பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பி, சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
முருங்கைக்காய்: இதில் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி ஆகிய சத்துக்கள் உள்ளன.
வெண்டைக்காய்: இதில் போலிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் நன்கு பசியை உண்டாக்க உதவுகிறது மற்றும் மூளை வளர்ச்சியை தூண்ட உதவுகிறது.
சுண்டைக்காய்: இது வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும், உடல் வளர்ச்சியைத் தூண்டும்.
பீட்ரூட்: இது ரத்தசோகையை குணமாக்கும். மேலும் கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
கேரட்: ரத்தத்தை சுத்தப்படுத்தும் மற்றும் கண் பார்வை தூண்டும்.
குடைமிளகாய்: இதில் வைட்டமின் ஏ பி சி சத்துக்கள் உள்ளது. செரிமான சக்தியைத் தூண்ட உதவுகிறது.
அவரைக்காய்: நார்ச்சத்து அதிகம் உள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும்.
கோவக்காய்: இதில் வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவை நீங்கும். மேலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
வாழைத்தண்டு, வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, கால்சியம் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை உள்ளது. மேலும் இது கல் அடைப்பை போக்கும் சக்தி கொண்டது. ரத்தசோகை வராமல் காக்கவும் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.