நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி காய்கறி விற்பனை செய்த மளிகை கடைக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகில் உள்ள பேட்டபாளையம் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மளிகை கடை வியாபாரம் செய்வதாக வருவாய்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா மற்றும் வருவாய்த்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்மளிகை கடையில் காய்கறி விற்பனை செய்தது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மளிகை கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்ததோடு மட்டுமல்லாமல் கடையை பூட்டி சீல் வைத்துள்ளனர். மேலும் ஊரடங்கு காலத்தில் கடைகளை திறக்க கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.