சேலம் மாவட்டத்தில் உழவர் சந்தை அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் காய்கறி விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள 4 உழவர் சந்தைகளும் மூடப்பட்டுள்ளதால் ஒவ்வொரு வார்டுகளிலும் வாகனங்களில் காய்கறிகள் கொண்டு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
இதனால் காய்கறி விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதால் மளிகை கடைக்காரர்கள் பொது மக்களிடம் கூடுதல் விலைக்கு விற்கப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனையடுத்து விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும் அரைக்கீரை, மணத்தக்காளி கீரை மற்றும் தண்டுக்கீரை உள்ளடக்கிய கீரை வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதால் பொதுமக்கள் காய்கறிகள் மற்றும் கீரை வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.