சேலம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வாரச்சந்தை நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி விவசாயிகள் வாரச்சந்தை நடத்தியுள்ளனர். அந்த வாரச்சந்தையில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு காய்கறிகளை வாங்கிச் சென்றுள்ளனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமானதால் சமூக இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் மற்றும் வட்டார அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வியாபாரம் செய்ய கூடாதென கூறி அனைவரையும் கலைந்து போக கூறியுள்ளனர். இதனால் வாரச்சந்தை பாதியிலேயே மூடப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கின் போது வாரச்சந்தை நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.