என்னதான் நாம் காய்கறிகள் மற்றும் பழங்களை பிரிட்ஜில் சேமித்து வைத்தாலும் சில தினங்களுக்குப் பிறகு அவை கெட்டு விடுகின்றது. உணவுப்பொருட்களை வீணாக்காமல் வைத்திருப்பது நம் அனைவரின் கடமை. சில உணவுப் பொருட்கள் கெடாமல் இருப்பதற்கு சில எளிய டிப்ஸ்களை இதில் பார்ப்போம்.
வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஒருபோதும் ஒன்றாக வைக்க கூடாது. ஏனெனில் உருளைக்கிழங்கில் இருந்து வெளியேறும் வாயு வெங்காயத்தை கெடுத்துவிடுகிறது. சில வீடுகளில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை ஒரே கூடையில் போட்டு வைக்கிறார்கள். இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள்.
ஒரு மாதத்திற்கு ப்ரோக்கோலியை புதிதாக வைத்திருக்க விரும்பினால் அலுமினியத்தால் கவரால் இறுக்கமாக சுற்றி பிரிட்ஜில் வைக்கவும்.
எலுமிச்சை பழத்தை அலமாரியில் சேமித்து வைப்பது அல்லது அவற்றை நேரடியாக குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் கெடாமல் இருக்காது. எலுமிச்சையை எப்போதும் கெடாமல் இருக்க விரும்பினால் ஒரு ஜிப் லாக் பை அல்லது சாதாரண பையில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் சேமித்தல் நல்லது.
இஞ்சியை ஒரு துணியில் அல்லது காகித பையில் போட்டு பின்னர் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லது.
வாழைப்பழம் பழுப்பு நிறமாக மாறுவதை தடுக்க காம்பில் பிளாஸ்டிக் பைகளை சுற்றி வைக்கவும். இவ்வாறு செய்யும்போது வாழைப்பழம் நீண்டநாள் கருப்பாக மாறாமல், பழுப்பு நிறமாக மாறாமலும் இருக்கும்.