Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான சைனீஸ் வெஜ் நூடுல்ஸ் வீட்டிலேயே செய்து ருசிக்கலாம் ….!!

வெஜ் நூடுல்ஸ்

தேவையான பொருட்கள் :

முட்டைக்கோஸ்-2 கப் (நறுக்கியது)

பீன்ஸ்-2 கப் (நறுக்கியது)

காரட் -2 கப் (நறுக்கியது)

பட்டாணி -2 கப் (நறுக்கியது)

மேகி நு}டுல்ஸ்-8 பாக்கெட்

வெங்காயம் -4

தக்காளி-2 கிலோ

கொத்தமல்லி இலை-2 கப்

இஞ்சி- 2 துண்டு

பு ண்டு-8 பல்

சோம்பு-4 டீஸ்பு ன்

பச்சை மிளகாய்-5

மிளகாய் தூள்-4 டீஸ்பு ன்

மிளகு தூள்-4 டீஸ்பு ன்

சீரகம்-4 டீஸ்பு ன்

எலுமிச்சை சாறு-சில துளிகள்

உப்பு-தேவைக்கேற்ப

எண்ணெய்-தேவைக்கேற்ப

Image result for வெஜ் நூடுல்ஸ்

செய்முறை :

வெஜ்  நூடுல்ஸ் செய்வதற்கு முதலில் நறுக்கி வைத்துள்ள காய்களுடன் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் போட்டு ஒரு விசில் வந்தவுடன் இறக்கவும். பிறகு வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, எண்ணெய் சு டானதும், அதில் சீரகம், நீளமாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பு ண்டு, சோம்பு, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் வேக வைத்துள்ள காய்கள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அதனுடன் நு}டுல்ஸை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும். நு}டுல்ஸ் வெந்ததும், உப்பு சரிப்பார்த்து டேஸ்ட் மேக்கரை சேர்த்து நன்கு கிளறி, அதனுடன் மிளகு தூள் சேர்த்துக் கலக்கி, அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு ஊற்றிக் கிளறவும்.

சுவையான வெஜ் நூடுல்ஸ் தயார்.

Categories

Tech |