Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேர்தல் வரப்போகுது… வியாபாரிகளிடம் பணம் பறிமுதல்… அதிரடி நடவடிக்கையில் பறக்கும் படை அதிகாரிகள்…!!

சேலத்தில் உள்ள வியாபாரிகள் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று அதிகாலை சந்தாபுரம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது முட்டை வாங்குவதற்காக சாரதி என்ற வியாபாரி லாரியில் சென்று கொண்டிருக்கும் போது அவரிடம் இருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோல் அரிசியை விற்பனை செய்துவிட்டு சேலம் மாவட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்த சீனிவாசனின் என்பவரிடமிருந்து ரூபாய் 1.25 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் சிவா என்பவர் ராசிபுரத்தில் கோழிகளை விற்றுவிட்டு ரூபாய் 90 ஆயிரத்தை கொண்டு வரும் போது பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் ராஜேஷ் என்ற வியாபாரியின் கையில் இருந்த ரூபாய் 65 ஆயிரத்தை போதிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே இந்த பிரச்சனை வந்துவிடுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் வியாபாரத்திற்காக வைத்துள்ள பணத்தை எங்கும் கொண்டு செல்ல முடியாமல் அவதிப்படுவதாகவும் கூறுகின்றனர். இதுபற்றிய தெளிவான முடிவினை விரைவில் எடுக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துக்கொண்டனர்.

Categories

Tech |