பெண் அழைப்பிற்காக சென்ற போது வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலியான நிலையில், 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவரங்கம்பட்டி பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும், பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இதற்காக மணமகன் வீட்டைச் சேர்ந்த 40 பேர் 2 சரக்கு வாகனத்தில் பெண் அழைப்பிற்காக புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆண்கள் மட்டும் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கருப்பம்பட்டி பகுதியில் இருக்கும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது.
இந்த விபத்தில் பெரியண்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் படுகாயமடைந்த 12 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.