புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கின் போது தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்த 41 பேரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.