ராணுவ குடியிருப்புக்குள் புகுந்த காட்டெருமைகள் வாகனங்களை முட்டி சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் பேரக்ஸில் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் குடியிருப்பு பகுதிக்குள் 2 காட்டெருமைகள் நுழைந்துவிட்டது.
இந்த காட்டெருமைகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதப்படுத்தியதோடு, அதிகாலை வரை அங்கேயே முகாமிட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் ராணுவ குடியிருப்பில் நுழைந்த காட்டெருமைகளை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.