Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதை அப்புறப்படுத்துனா போதும்… அச்சத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

சாலையில் பரவிக்கிடக்கும் மணலை அப்புறப்படுத்த வேண்டி அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தீயணைப்பு நிலையத்தின் அருகில் மணல்மேடு ஒன்று உள்ளது. அதிலிருந்து மணலானது சாலையின் ஒரு பகுதி முழுவதும் சிதறிக் கிடக்கிறது. இந்நிலையில் அந்த சாலையில் வாகனங்கள் வேகமாக செல்லும் போது எதிரே வரும் வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை இடது ஓரமாக திருப்புகின்றனர்.

அப்போது அவர்களின் வாகனங்கள் இந்த மணல்மேட்டில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் மணல் மேட்டையும், பரவிக்கிடக்கும் மணலையும் அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |