வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடியை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்புறம் காரை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் நான்கு மர்ம நபர்கள் போதையில் மணிகண்டன் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை அடித்து உடைத்துள்ளனர். மேலும் அந்த மர்ம நபர்கள் அந்த தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதனையடுத்து காலையில் எழுந்து பார்த்த போது வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர், அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,