சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது ஒரே நாளில் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த 575 வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த 575 வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் முக கவசம் அணியாமல் வெளியில் சென்ற 259 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுக்குறித்து காவல் துறையினர் கூறும் போது பொதுமக்கள் அதிகமாக வெளியில் செல்வதால் வைரஸ் தொற்று அதிகமாக பரவும், அதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.