Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அதனை திரும்ப கொடுங்கள்” உரிமையாளர்களின் போராட்டம்… காவல் நிலையத்தில் பரபரப்பு…!!

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்க வேண்டி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தவர்களின் மீது வழக்குப்பதிந்து காவல்துறையினர் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து விட்டனர். அதன்படி மொத்தம் 227 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருவொற்றியூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை திரும்ப கொடுங்கள் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உயர் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற்றவுடன் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைப்பதாக கூறியுள்ளனர். அதன்பின் போராட்டத்தை கைவிட்டு உரிமையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |